வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை சதைப்பற்றுடன் பல கிளைகள் கொண்ட தாவரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் காணப்படுகிறது. இக்கீரை சதுப்புநிலங்களில் இயற்கையாக வளரக் கூடியது. வளரும் போது ஊதா மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் தென் மாநிலங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் இக்கீரை வளர்கிறது.

வல்லாரையின் சிறப்பம்சம்

சில கீரை வகை தாவரங்களில் எதாவது ஒன்று மட்டுமே நமக்கு பயன்படும், அதாவது இலை பயன்படும் போது தண்டு நமக்கு பயன்படாது, தண்டு பயன்படும் போது வேர் பயன்படாது, ஆனால் வல்லாரை கீரை என்று சொல்லக் கூடிய இத்தாவரம் நமக்கு முழுவதுமாக மருந்து பொருளாக பயன்படுகிறது. இதன் சுவை கசப்பாக இனிப்பூட்டும் சுவையுடன் இருக்கும்.

குணமாகும் நோய்கள்:

மன அழுத்தம், அல்சைமர் நோய், நினைவாற்றல் செரிவு, அழற்சி சம்பந்தமான நோய்கள், எலும்பு நோய்கள், முடி உதிர்தல், தோல் நோய்கள்,

முடி உதிர்தல்:

அதிகமாக முடி உதிர்ந்தால் அதற்கு வல்லாரை எண்ணெயைய் பயன்படுத்துவார்கள். காரணம் வல்லாரையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்கள் இறந்து போன முடியின் வேர்களை உயிர்பித்து மீண்டு முடிகளை வளர உதவுகிறது. மேலும் தலையில் உள்ள அரிப்பு, பொடுகு, ஆகியவற்றை நீக்குகிறது. தலையில் இந்த எண்ணெயைய் வாரத்திற்கு இரு முறை ஊற்றி மசாஜ் செய்தால் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

அல்சைமர் நோய்

மூளைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நியூரானில் அமிலாய்டு கலவை நமது உடம்பில் இருந்தால் அவை நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும். அது சிறிது சிறிது பெரிதாகி அல்சைமர் நோயாக மாறுகிறது. ஆனால் வல்லாரை, மூளை செல்களை பாதிக்கும் கலவையை நீக்கி பாதிப்படைந்த மூளை செல்களை சரி செய்கிறது. இதனால் அல்சைமர் நோயை குறைக்க முடியும்.

மன அழுத்தம்

மன அழுத்தம் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து உட்கொண்டால் மன அழுத்தத்தை கொடுக்க கூடிய கார்டிசோல் ஹார்மோனை குறைக்கும் ஆற்றல் கொண்டது வல்லாரை. மேலும் இது அனிஸிட்டி பிரச்சனைகளையும் திர்க்கிறது.

நினைவற்றல்

நினைவாற்றல் செறிவிற்கு காரணமான ஹிப்போ கம்பஸ் பகுதியில் வல்லாரை நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. இதனால் சில அம்மாக்கள் பள்ளிப்படிப்பு படிக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும் என்று தினமும் உணவில் சேர்த்து கொடுப்பார்கள்.

வல்லாரை கீரை நினைவாற்றல் அதிகரிக்க மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

புற்றுநோயை தடுக்கிறது

நாம் ஆரோக்கியமாக இருக்க நமது உடம்பிற்கு அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்கள் தேவைப்படுகிறது. இதனை அதிகரிக்க வல்லாரையை உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். உட்கொண்டால் ஆன்டி ஆக்ஸிடன்கள் நமது உடம்பில் தானாக அதிகரித்து நமக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் தினமும் வல்லாரையை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானல் வல்லாரையை உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

அழற்சி மற்றும் தோல் நோய்கள்

வெட்டுகாயங்கள் மற்றும் சரும பிரச்சனைகள் உள்ள இடத்தில் ஹீமோடைனமிக்ஸை தூண்டி வெட்டுகாயங்கள் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சீக்கிரமே தீர்வு காண்கிறது. தழும்புகளை மறைய செய்து புதிய செல்கள் புதுப்பிக்கிறது.

வல்லாரையின் இதர பயன்கள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
வல்லாரை கீரையை பொடியாக்கி உட்கொண்டால் முதுகு வலி, மூட்டுவலி போன்ற சில பிரச்சனைகளுக்கு ஓர் தீர்வாக அமைகிறது.

Recent Post