வீரபாண்டியபுரம் திரை விமர்சனம்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’வீரபாண்டியபுரம்’ இது ஜெய்யின் 30 வது படமாகும். இப்படத்தில், ஜெய் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். மேலும் பாரதிராஜா, ஸ்ம்ருதி வெங்கட், திவ்யா துரைசாமி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாயகி மீனாட்சி இவருக்கும் ஜெயிக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் வரை செல்கிறது. தாலிகட்டும் கடைசி நேரத்தில் மனம் மாறுகிறார் ஜெய். பிறகு ஜெய் மீனாட்சியின் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார்.
இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது. இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? இதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் நின்று போன திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் அமைதியான கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். சண்டை காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
படத்தில் மீனாட்சி, அகன்ஷா சிங் என இரு கதாநாயகிகள் உள்ளனர். இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாலசரவணன் நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் ரசிக்க முடிகிறது சில காமெடி காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது
பின்னணி இசை படத்திற்கு பொருந்துகிறது. பாடல்கள் சுமார் ரகம்.
திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமத்தின் அழகை தனக்கே உரிய பாணியில் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
தமிழ் சினிமாவில் ஏற்கனவே பலமுறை பார்த்த பழிவாங்கும் கதைதான் இந்த வீரபாண்டியபுரம்.
