Search
Search

வீட்ல விசேஷம் திரை விமர்சனம்

ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வீட்ல விசேஷம்’. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளனர். ரோமியோ பிக்சர்ஸுடன் இணைந்து போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Veetla Vishesham movie review in tamil

ஆர் ஜே பாலாஜி பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளியை காதலித்து வருகிறார். ஆர் ஜே பாலாஜியின் தந்தை சத்யராஜ் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார்.

ஆர் ஜே பாலாஜி காதல் திருமணம் கைகூடி வரும் நேரத்தில் அவரின் தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனால் ஆர் ஜே பாலாஜி திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் தாயின் கர்பத்தை ஆர் ஜே பாலாஜி ஏற்றுக்கொண்டாரா? தனது காதலி அபர்ணா பாலமுரளியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி காமெடி, கிண்டல் என தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் கவனத்தை ஈர்த்துள்ளார்,

நாயகியாக வரும் அபர்ணா பாலமுரளி கொடுத்த வேலையை சரியாக செய்து கொடுத்துள்ளார். சத்யராஜ் மற்றும் ஊர்வசி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுடைய நடிப்பு தான் படத்திற்கு பெரிய பலம்.

அனைவரும் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி உள்ளார்கள்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் வீட்ல விசேஷம் – வரவேற்கலாம்.

Leave a Reply

You May Also Like