வெயில் காலத்தில் உடம்பில் ஏற்படும் சூடு கட்டியை சரி செய்ய டிப்ஸ்

வெயில் காலம் வந்துவிட்டால் உடல் சூடு தாங்காமல் சிலருக்கு கட்டிகள் உருவாகிவிடும். இது கொப்பளங்கள் போல் வீங்கி வலியை ஏற்படுத்தும். இந்த கட்டிகளை குணப்படுத்தும் வழிகளை பாப்போம்.

soodu katti treatment in tamil

மஞ்சளை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவேண்டும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இவ்வாறு செய்ய வேண்டும்.

Advertisement

வேப்பிலையை நன்றாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவேண்டும். இவ்வாறு செய்துவந்தால் சில நாட்களிலேயே கட்டிகளின் வீக்கம் குறைந்து விடும்.

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கால் பாதங்கள், நகங்களின் மேற்பரப்புகளில் விளக்கெண்ணெய் தடவலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரும்.

உடலில் நீர்ச்சத்து நன்றாக இருந்தால் உடல் சூடு ஏற்படாது. எனவே தேவையான தண்ணீர் பருக வேண்டும்.

உடல் சூட்டை தணிக்கும் இயற்கை மருத்துவங்கள்