Search
Search

வெங்காயத்தாளில் உள்ள மருத்துவ குணங்கள்

spring onion in tamil

வெங்காயத்தின் இலைதான் வெங்காய தாள் என அழைக்கப்படுகிறது. உடல் எடையை குறைப்பதில் முன்னோடியாக உள்ளது. இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக நோய்கள், மாதவிலக்கு கோளாறுகள், குடற்புண் போன்ற பிரச்சனைகள் தீரும்.

வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது.

வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் ரத்த மூலம் குணமாகும்.

வெங்காய தாளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் நல்ல பசி ஏற்படும்.

வெங்காயத் தாளை அரைத்து அதில் ஒரு கிராம் ஜாதிக்காய் பொடியை கலந்து சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

வெங்காயத்தாள், துத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் குடல் புண், வாய் புண் குணமாகும்.

வெங்காயத்தாள் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.

You May Also Like