Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். வெங்காயத்தில் சுவையும் மனமும் அதிகம். அதே போல வெங்காயத்தில் மருத்துவ குணங்களும் அதிகம் இருக்கிறது.

வெங்காயத்துடன் துத்தி இலை மற்றும் சிறு பருப்பைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். மூலச்சூடு தணியும்.

வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.

வெங்காயத்தை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.

வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் கண், காது சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

வெங்காயத்தை வதக்கி, அரைத்து கொப்புளம், காயங்களில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.

வெங்காயச் சாற்றில் கடுகு எண்ணெய் கலந்து தடவி வந்தால் மூட்டு வலி நீங்கும்.

வெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.

வெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பனங்கற்கண்டைச் சேர்த்து, சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் சாப்பிட்டால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

வெங்காயச் சாற்றில் தேன் கலந்து குடித்துவந்தா இருமல், மார்புச் சளி உள்ளிட்ட மார்பு நோய்கள் நீங்கும்.

வெங்காயத்தை விளக்கெண்ணெய்யில் வதக்கி தினமும் சாப்பிட்டுவந்தால் வயிறு சுத்தமாகும். மலச்சிக்கல் வராது.

வெங்காயத்தை அடிக்கடி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வயிறு மற்றும் கல்லீரல் புண்கள் குணமாகும்.

வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு – இரண்டையும் சம அளவு கலந்து குடித்தால் நீரிழிவு நோய் குறையும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து, பனங்கற்கண்டு சேர்த்து துவையல் செய்து, காலை மாலை இரு-வேளையும் சாப்பிட்டுவந்தால் மூல நோய் தணியும்.

வெங்காயச் சாற்றை சூடான சாதத்தில் ஊற்றிப் பிசைந்து உப்பு சேர்த்து நகச்சுத்தியில் வைத்துக் கட்டுப்போட்டால் விரைவில்
பிரச்னை தீரும்.

சின்ன வெங்காயத்தை, வெல்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் பித்தம் குறையும்.

வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி, தேள் கொட்டிய இடத்தில் நன்றாகத் தேய்த்தால் வலி குறையும். விஷமும் இறங்கும்.

வெங்காயம், வசம்பு, இலுப்பைப் பட்டை, பாவட்டை இலை தலா 60 கிராம் எடுத்து தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி, தினமும் மூன்று வேளையும் குடித்தால் கரப்பான் என்ற தோல் பிரச்னை தீரும்.

வெங்காயத்துடன் படிகாரத் தூள் சேர்த்துச் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்.

வெங்காயத்தைப் பாலில் வேகவைத்து, நன்றாக அரைத்து பருக்கள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.

வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டைச் சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெள்ளை வெங்காயத்தைச் சாறு பிழிந்து, இரண்டு காதுகளில் சில சொட்டுகள் விட்டால் காக்காய் வலிப்பு உடனே நிற்கும்.

வெங்காயத்தைச் சாறு பிழிந்து, கண்களில் விட்டால் இழுப்பு உடனே நின்றுவிடும்.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top