Search
Search

“ஆளே மாறிப்போன சாமி பட வில்லன்” : தான் இறந்துவிட்டதாக வந்த வதந்தி – அவரே அளித்த விளக்கம்

தெலுங்கில் Pranam Khareedu என்ற திரைப்படத்தின் மூலம் 1978ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர்தான் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். சுமார் 45 ஆண்டுகளாக பல நூறு படங்களில் நடித்து பெயர் பெற்றவர் தான் அவர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் இவர் இன்றளவும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

கடந்த 2003ம் ஆண்டில் பாலச்சந்தர் அவர்களுடைய கவிதாலயாவின் தயாரிப்பில், இயக்குனர் ஹரி அவர்களின் இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படம் தான் இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம். விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த இவர் இறுதியாக தமிழில் நடித்த படம் காத்தாடி.

கன்னட மொழியிலும் தெலுங்கு மொழியிலும் தொடர்ச்சியாக நடித்தும் வருகிறார். நந்தி விருதுகள் மற்றும் சைமா விருதுகளை பலமுறை வாங்கியுள்ள கோட்டா சீனிவாச ராவ் அவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கோவரவித்தது இந்திய அரசு.

இந்நிலையில் இன்று காலை வெளியான ஒரு போலியான செய்தியில், சீனிவாச ராவ் தனது 75வது வயதில் காலமானார் என்று கூறப்பட்டது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ந்துபோன நிலையில், ஒரு காணொளி மூலம் அவரே நேரில் தோன்றி தான் நலமுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.

தயவு செய்து தவறான, போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

You May Also Like