வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

வெற்றிலையை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. திருமணம் வீட்டு விசேஷங்களில் உள்ள விருந்துகளில் வெற்றிலை முதன்மை வகிக்கிறது.

விருந்து சாப்பிட்டு முடித்தவுடன் வெற்றிலை போடும் பழக்கம் பல காலமாக தொடர்ந்து வருகிறது.

வெற்றிலையை யாரும் சமைத்து உண்பதில்லை. பெயர்தான் வெற்றிலை. ஆனால் உண்மையில் இது மருத்துவ குணம் கொண்ட மூலிகை ஆகும்.

Advertisement

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

மூன்று வெற்றிலைகளை எடுத்து கசக்கி சாறாக்கி அதில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு நெற்றி பகுதியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிதளவு சீரகத்தையும் உப்பையும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிடுங்கள். சிறிது நேரம் கழித்து வெந்நீர் குடியுங்கள். நீங்கள் சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகும்.

கம்பளி பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலையை வைத்து அழுத்தி தேய்த்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையுடன் ஓமம் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

வெற்றிலையோடு மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் தொண்டை புண் குணமாகும்.

2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதை காணலாம்.

வெற்றிலைச் சாறுடன் இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் மார்புச் சளி நீங்கி சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்.

மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலை வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே அதனை தவிர்ப்பது நல்லது.