விடாமுயற்சி.. தல அஜித்திற்கு ஜோடி யாராக இருக்கும்? – முணுமுணுக்கும் கோலிவுட்!

கோலிவுட் சினிமாவின் முன்னனி நடிகரான தல அஜித் குமார், சில காலம் தனது பைக்கில் தான் நினைத்த இடங்களுக்கு செல்வது என்றும் சில மாதங்கள் தன் ரசிகர்களுக்காக படத்தில் நடிப்பது என்றும் பிரித்து தன் வாழ்க்கையை மிக அழகாக வாழ்ந்து வருகின்றார்.
இன்னும் சொல்லப்போனால், தன் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக வாழ்ந்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62வது படத்தில் விரைவில் நடிக்க துவங்க உள்ளார் அஜித்குமார்.
விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அனிருத் அவர்களுடைய இசை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித் குமார் அவர்களுடன் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை திரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் பல வெற்றி திரைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. விகடன் வெளியிட்ட தகவலின்படி வருகின்ற ஜூன் மாத வாக்கில் விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.