பத்து தல, விடுதலை : வசூலில் முந்திச்செல்வது யார்? – வெளியான ரிப்போர்ட் !

வெகு நாட்கள் கழித்து சிம்புவிற்கு பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல, ரசிகர்கள் கொண்டாடும் ஒரு வெற்றியாகத் தான் பத்து தல திரைப்படம் அமைந்திருக்கிறது என்று கூறலாம். படம் வெளியாகி ஐந்து நாட்களில் தமிழகத்தில் 30 கோடியும் overseas வியாபாரத்தில் 18 கோடியும் ஆக மொத்தம் 48 கோடி ரூபாய் இந்த படம் சம்பாதித்துள்ளதாக ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றது.
சிம்புவிற்கு ஒரு நல்ல ரி-என்ட்ரி கொடுத்த திரைப்படம் இது என்றே கூறலாம், அதே நிலையில் அவருடைய அடுத்த திரைப்படம் தற்பொழுது உருவாக காத்திருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் சிம்புவின் பத்து தல திரைப்படத்திற்கு போட்டியாக களமிறங்கிய மற்றொரு திரைப்படம் தான் சூரியின் நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம்.
இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் 28 கோடி ரூபாய் ஈட்டி பெரும் வசூல் சாதனையைப் படைத்து வருகிறது. பத்து தல படத்தை ஒப்பிடும்போது சற்று குறைந்த அளவிலான வசூல் என்றாலும் கூட, சிம்பு என்ற மாபெரும் நடிகருடன் இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடித்து வந்த சூரியின் திரைப்படம் இந்த அளவுக்கு வசூல் பெற்றிருப்பது மாபெரும் சாதைனயாக கருதப்படுகிறது.
உண்மையில் குணச்சித்திர நடிகராக காமெடி நடிகனாக மட்டுமே பார்க்கப்பட்ட சூரி தற்பொழுது ஹீரோவாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். காரணம், அதற்கு அவர் முயன்று எடுத்த அத்தனை முயற்சியே.