Search
Search

“நீங்க கலக்குங்க”.. வெளியானது தொகுப்பாளர் ரக்ஷனின் அடுத்த பட அப்டேட்!

பல தமிழ் டிவி சேனல்களில் சிறு சிறு வேலைகள் செய்ய துவங்கி, அதன் பிறகு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி. பிறகு புகழ்பெற்ற தொகுப்பாளராக மாறி, ஒரே ஒரு படத்தில் ஓஹோ என்று புகழ் பெற்றவர் தான் தொகுப்பாளர் ரக்ஷன்.

பிரபல தொகுப்பாளர் ரக்சன் அவர்கள் விஜய் டிவியில் ஸ்டார் ஆங்கர் ஆக இருந்து வருகின்றார். அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி ஷோவை இவருக்காகவே பார்க்கும் இளசுகளும் உண்டு. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள் என்ற படத்தில் துல்கர் சல்மானின் மிக நெருங்கிய நண்பராக நடித்து புகழ்பெற்றார்.

இந்த ஒரே படம் அவரை புகழ்ந்து உச்சிக்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல, ஏற்கனவே விஜய் டிவியில் நல்ல ஒரு இடத்தில் இருந்து வரும் இவர், இந்த படத்திற்கு பிறகு சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார்.

தற்போது அடுத்தகட்டமாக யோகேந்திரன் இயக்கத்தில், சச்சின் வாரியர் என்பவர் இசையமைக்க Filia என்டேர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ரக்சன் நடிக்கவுள்ளார்.

இரு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல திங்க் ம்யூசிக் நிறுவனம் தற்போது பெற்றுள்ளது.

You May Also Like