விலங்கு திரை விமர்சனம்
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘விலங்கு’ என்ற இணைய தொடர். இந்த தொடர் வரும் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் விமல், இனியா, முனீஸ்காந்த் ராமதாஸ், என்.ஆர்.மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை :
காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில், தலை துண்டிக்கப்பட்டு ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. இதனை விசாரிக்கும் பொறுப்பை காவல் ஆய்வாளர் என்.ஆர்.மனோகர் விமலிடம் ஒப்படைக்கிறார். சிறிது நேரத்தில் அந்த பிணத்தின் தலை காணாமல் போகிறது. இறுதியில் கொலையாளியை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த தொடரின் கதை.
கிராமத்து பின்னணியில் மர்டர் மிஸ்டரி கதையை மிக யதார்த்தமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ். 7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த இணையத் தொடரின் 75 சதவீத காட்சிகள் காவல் நிலையத்திலேயே நடைபெறுகின்றன.

கடைசி இரண்டு பாகங்களில் விமல் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். விமலுக்கு மனைவியாக நடித்துள்ள இனியாவுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாலா சரவணன் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் முனீஸ்காந்த் ராமதாஸ், என்.ஆர்.மனோகர் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
தினேஷின் ஒளிப்பதிவும் Super Singer Ajesh -யின் இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது.
தமிழில் வரும் வெப் சீரிஸ்க்கு வரவேற்பு குறைவாக இருந்து வருகிறது. அதனை ‘விலங்கு’ சரிசெய்யும் என நம்பலாம்.
மொத்தத்தில் விலங்கு – வேட்டை விலங்கு
