வீராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம்.

veerasana benefits in tamil

வீராசனம் செய்முறை

தரையில் அமர்ந்து வலது காலைத் தூக்கி இடது தொடை மீது வைத்து, வலது குதிங்கால் இடதுபுற அடிவயிற்றைத் தொடும்படி வைத்து கொள்ளவும். பின்னர் இடது காலை மடித்து வலது பக்க தொடை அருகே கொண்டு செல்ல வேண்டும்.

Advertisement

இரு கைகளும் இரு முழங்கால்கள் மீது இருக்க வேண்டும். இதேபோல், கால்மாற்றி இடது காலையும் வலது கால் மேல் வைத்து ஆசனத்தை தொடரலாம்..

சுவாசம் சீராகவும், முதுகு நேராகவும் இருக்க வேண்டும். இந்த ஆசனம் மிகவும் சுலபமானது.

வீராசனத்தின் பயன்கள்

  • நுரையீரல் நோய்கள் அணுகாது.
  • அனைத்து நாடிகளும் ஆற்றல் பெரும்.
  • முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.