கமிஷ்னர் காரை எட்டி உதைத்த விஷால் பட நடிகை?.. அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது என்ன?

தெலுங்கில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான Gulf என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் தேவி 2 மற்றும் விஷாலின் வீரமே வாகை சூடம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை தான் டிம்பிள் ஹயாத்தி.
24 வயதாகும் டிம்பிள், தற்போது ஹைதராபாதில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். அதே குடியிருப்பில் மாநகர போக்குவரத்துக்கு ஆணையரான ராகுல் ஹெக்டே என்பவரும் வெகு நாட்களாக வசித்து வருகின்றார்.
நடிகை டிம்பிள் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இடையே அடிக்கடி தங்கள் வானங்களை பார்க் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிம்பிளின் வருங்கால காதல் கணவர் டேவிட், ராகுலின் காரை நடிகை டிம்பிளின் காரை கொண்டு இடித்ததாகவும், டிம்பிள் ராகுலின் காரை காலால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையில் ராகுல் புகார் அளித்த நிலையில், தற்போது டிம்பிளை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசரணையில் அதிகாரத்தை கொண்டு யாரும் தவறுகளை மறைக்க முடியாது என்று டிம்பிள் கூறியுள்ளார்.