Search
Search

எல்லாத்தையும் மாத்தி, மறந்து, மாறி வந்த மார்க்.. பட்டையை கிளப்பும் மார்க் ஆண்டனி டீசர்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி உள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. பிரபல நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா இணைந்து கலக்கி இருக்கும் இந்த படத்தின் டீசர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது.

இந்த டீசர் நேற்று மாலை வெளியாவதற்கு முன்பாக தளபதி விஜய் அவர்களிடம் நேரில் சென்று விஷால் மற்றும் இயக்குநர் ரவிச்சந்திரன் இந்த டீசரை காண்பித்து வாழ்த்துக்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இந்த டீசர் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ஆரம்பகட்டத்தில் இதை வெறும் பீரியட் பிலிம் என்று நினைத்திருந்த நிலையில், தற்போது இது ஒரு சயின்ஸ்-பிக்ஷன் திரைப்படமாகவும் உள்ளது. காலத்தை கடந்து செல்லும் ஒரு அலைபேசி, அதை பயன்படுத்தி ஹீரோவும் வில்லனும் எப்படி தங்கள் வாழ்க்கை பயணத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை மிகவும் அழகாக கூறியுள்ள ஒரு திரைப்படமாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குநராக களமிறங்கியவர் தான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

You May Also Like