நடிகர் விவேக் காலமானார் – அவருக்கு நடந்தது என்ன?

சென்னை: மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலை சுமார் 5.55 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 59.
இந்த எதிர்பாராத சம்பவம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில்தான் படப்பிடிப்பிற்காக வட இந்திய மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையெடுத்து, அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
பரிசேதனையில் இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, மேலும், ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது உயிரை காப்பாற்ற எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த விவேக். தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைத்தவர். நடிப்புமட்டுமல்லாமல் மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார்.
அவர் குணமடைய திரைத்துறை பிரபலங்களும் அவரது ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில், அவரது இறப்பு செய்தியினை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.