Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்

மருத்துவ குறிப்புகள்

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் யோகா, நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என பல முயற்சிகளில் இறங்கியிருப்பார்கள். இதோடு ஜூஸ் வகைகளை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும். உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.

சுரைக்காய் ஜூஸ்

உடல் எடையை குறைக்க சுரைக்காய் ஜூஸ் சிறந்த உணவாக பயன்படுகிறது. ஆயுர்வேதத்தில் கொழுப்பை குறைக்க சுரைக்காய் சிறந்த மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. சுரைக்காய் குறைவான கலோரிகளை கொண்டது. மேலும் இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

அன்னாசி ஜூஸ்

வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க அன்னாசி பழம் ஜூஸ் பயன்படுகிறது. அதில் உள்ள ப்ரோமெலைன் என்ற திரவம் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் இது பசியை குறைக்கவும் செய்கிறது.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழ சாற்றில் கலோரிகள் மிகவும் குறைவு. இது உடல் எடையை குறைக்க உதவும். உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது.

தர்பூசணி ஜூஸ்

100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் உள்ளது. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்து தருகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

முட்டைகோஸ் ஜூஸ்

முட்டைகோஸ் சாறு வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் ஜீரண கோளாறுகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மாதுளை ஜூஸ்

மாதுளை பழ சாறு உடல் எடையை குறைப்பதற்கும் இயற்கையாகவே தோலில் பொலிவை ஏற்படுத்தவும் உதவுகிறது. மாதுளையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், லினோலெனிக், பாலிபினால்கள் உள்ளது. இவை அனைத்தும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது ஜீரண உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடலின் எடையை சீராக வைத்துக்கொள்ளும். நெல்லிக்காய் சாற்றினை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.

வெள்ளரிக்காய் ஜூஸ்

நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் வெள்ளரிக்காயும் ஒன்று. இதிலும் கலோரிகள் குறைவு. வெள்ளரிக்காய் சாறுடன் சிறிது எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

பாகற்காய் ஜூஸ்

100 கிராம் பாகற்காயில் 17 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது குடிப்பதற்கு கசப்பாக இருந்தாலும் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும்.

கேரட் ஜூஸ்

கேரட்டில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது பயன்படுகிறது. கேரட் சாறு எடுத்து குடிப்பதை விட பச்சையாக கடித்து சாப்பிடுவது மிகவும் நல்லது. கேரட் சாறுடன் சிறிது இஞ்சி சேர்த்துக் கொள்வது நல்லது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top