வெள்ளை முடி கருப்பாக வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க..

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும்.இதனால் நிச்சயம் உங்கள் தலை முடி கருமையாவதோடு, வேறு சில பிரச்சனைகளும் நீங்கும்.

நெல்லிக்காய் பொடியுடன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் அலசவேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

கேரட் ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம் வெள்ளை முடியைத் தடுக்கலாம். மேலும் கேரட் ஜூஸ் முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும். ஆகவே உங்களுக்கு முடி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால் கேரட் ஜூஸ் குடியுங்கள்.

Advertisement

வெங்காயம் முடி உதிர்வதைத் தடுப்பதுமட்டுமின்றி, வெள்ளை முடியையையும் போக்கும்.அதற்கு வாரம் ஒருமுறை வெங்காயத்தை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.