இளப்பெண் செய்த புரட்சி… புகழ்ந்து தள்ளும் இணையவாசிகள்

இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு இணையத்தில் கவனத்தையும், பாரட்டையும் பெற்று வருகிறது.
இன்றைய நவீன காலத்தில் கூட பெண் மறுமணம் செய்துகொள்வது என்பது அவ்வளவு எளிதனது அல்ல. கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும், இந்த சமூகத்தின் அவசொல்லுக்கு பயந்தும், மறுமணம் செய்து கொள்ள தயங்கின்றனர். ஆனால் ஆங்காங்கே சில மாற்றங்கள் நடந்து வரத்தான் செய்கிறது.
அந்த வகையில், வடஇந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு மறுதிருமணம் செய்து வைத்து அதன் நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தனது தாய் மண கோலத்தில் இருப்பதையும், நிகழும் மங்களகரமான நாளுக்காக, தனது தாய்க்கு மெஹந்தி நிகழ்ச்சி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘15 ஆண்டுகளுக்கு முன் தனது தாய்க்கு மறுமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதனை தான் வேண்டாம் என சொல்லி நிறுத்தி விட்டேன். ஆனால் அந்த சமயத்தில் அப்போது நானும் எனது 16 வயது சகோதரனும் எங்கள் குடும்பத்திற்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்பொழுது எங்கள் வாழ்க்கையில் தந்தையாக ஒருவரை ஏற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி பெறுகிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், தனது தாயின் திருமண வைபவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவரத டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இந்த டுவீட்டுகளை எதிர்காலத்தில் நான் பார்க்கும்போது மிகவும் சந்தோசம் அடைவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தாய்க்கு அவரது மகள் திருமணம் செய்து வைத்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது, மேலும், அவரது தாய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.