பானிபூரி சாப்பிட்ட பெண் மயங்கி விழுந்து மரணம்..!

ஈரோட்டில் சாலையோரம் உள்ள ஒரு பானிபூரி கடையில் பானி பூரி சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரோகிணி தேவி என்பவர் நேற்று முன்தினம் சகோதரர் பானிபூரி வாங்கி கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வாந்தி எடுத்து உள்ளார். மறுநாள் காலை ரோகிணி சோர்வாக இருந்துள்ளார். பிறகு திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
சிகிச்சைக்காக ரோகிணி தேவியை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பானிபூரி சாப்பிட்டதால் இறந்து விட்டதாக உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் பானிபூரி எந்த கடையில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.
சமீபத்தில் சென்னையில் சாலையோர பானிப்பூரி கடையில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஈரோட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.