ஒரே ஒரு முறை விநாயகரை இப்படி வழிபடுங்கள். பிறகு வாழ்க்கையில் கஷ்டமே வராது.

வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டத்தை மட்டும் அனுபவித்து எதிர் நீச்சல் போட்டுக்கொண்டே இருப்பவர்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வணங்கினால் போதும். அப்புறம் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராது.

aanmeegam tips in tamil

எந்த செயல் செய்தாலும் நாம் முதலில் விநாயகரை வணங்குவோம். முழு மனதோடும் நம்பிக்கையோடும் உங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

திங்கட்கிழமை முதல் நாள் ஒரு தேங்காய். செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாள் இரண்டு தேங்காய். இப்படியாக வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாள் ஐந்து தேங்காய் என மொத்தம் 15 தேங்காய்கள் நமக்கு தேவைப்படும். இந்த 15 தேங்காய்களை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

Advertisement

திங்கட்கிழமை காலையில் குளித்துவிட்டு பூஜை அறையில் தேங்காயில் ஒரு தேங்காயை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி பிறகு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு சிதறு தேங்காய் உடைத்து விட்டு விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும்.

இதே போல் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, என தொடர்ந்து 5 நாட்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே கூறியது போல திங்கட்கிழமை ஒரு தேங்காய், செவ்வாய்க்கிழமை இரண்டு தேங்காய் புதன்கிழமை மூன்று தேங்காய் என அதிகரிதுக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை கட்டாயமாக திங்கட்கிழமையில் தான் இதை நீங்கள் தொடங்க வேண்டும். இறுதி நாளில் அருகம்புல் அர்ச்சனை செய்துவிட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஒரே ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் விலகிவிடும்.