Search
Search

அதிவேகமாக காரில் சென்று ஏற்பட்ட விபத்து.. நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா

கடந்த 2018ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தபோது BB மூலம் பிரபலமானவர் தான் யாஷிகா ஆனந்த். 2016ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்பதே இவர் நடித்த முதல் படம்.

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பகீரா படத்தில் இவர் நடித்துள்ள நிலையில் இன்னும் 4 படங்களில் நடிக்க இவர் கமிட்டாகியுள்ளார். கடந்த 24 ஜூலை 2021ல் மஹாபலிபுரம் அருகே அதிவேகமாக காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார் யாஷிகா.

இந்த விபத்தில் அவருடைய தோழி ஒருவர் மரணித்து குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து உடலநலம் தேறிய நிலையில் தற்போது மீண்டும் நடிக்கத்துவங்கியுள்ளார் யாஷிகா. மேலும் முன்பைப்போலவே கவர்ச்சி தூக்கலான போட்டோஷூட்களை வெளியிட துவங்கியுள்ளார்.

இந்நிலையில் வேகமாக காரில் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கு இவர் மேல் நிலுவையில் உள்ளது. யாஷிகா நேரில் ஆஜராகும்படி செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் அவர் பல நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இறுதியாக நீதிமன்றம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாறுதல் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கபடும் என்று கூறிய நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

You May Also Like