பரங்கிக்காய் பரவலாக விளையக்கூடிய ஒரு காய். அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் காய்கறிகளில் இதுவும் முக்கியமான ஒன்று. பரங்கிக்காயை மஞ்சள் பூசனிக்காய் என்றும் அழைப்பதும் உண்டு.
பரங்கிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி, பி6, ஃபோலேட், நியாசின், பான்டோதெனிக் அமிலம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உண்டு.
பரங்கிக்காய் சாறு எடுத்துக் கொண்டால் கடும் வெயிலால் ஏற்படும் மயக்கம் தீர்க்கும்.
ஈரல் உபாதையில் குணம் அளிக்கும்,
பரங்கிக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.
பரங்கிக்காய் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவற்றை சரி செய்கிறது.
இந்தச் சாற்றை தண்ணீர் கலந்து குடித்தால் கண்புரையை குணப்படுத்தும்.
பரங்கிச்சாற்றைக் கொண்டு வாய்கொப்பளித்து வந்தால் பல்லின் வேரையும் அதைச் சுற்றி உள்ள திசுக்களையும் பாதிக்கும் பல் நோய் குணப்படுத்தும்.
சளி மற்றும் காய்ச்சலை போக்கவும் இது பெரிதும் உதவும்.
பரங்கிக்காய் உடம்புக்கு வலிமையும், சக்தியும் அளிக்க வல்லது. அயர்ச்சி, பித்தம் நீக்கும், கபத்தை வெளியேற்றும். உடல் பருமனைக் குறைக்கும்.
மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
பரங்கிக்காய் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.
100 கிராம் பரங்கிக்காயில் இருக்கும் சத்துக்களின் அளவு
- ஆற்றல் – 26 கிலோ கலோரி
- புரதம் – 1 கிராம்
- கொழுப்பு – 0.1 கிராம்
- கொலஸ்ட்ரால் – 0 கிராம்
பரங்கிக்காய் அழகு குறிப்புகள்
பரங்கிக்காயில் சருமப் பளபளப்புக்குக் தேவையான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது. மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடும். வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.
பரங்கிச்சாற்றை அடிக்கடி முகத்தில் பூசிவர முகத்தில் உள்ள அழுக்கு கரும்புள்ளிகள் மறைந்து முகம் மிருதுவாகும்.
இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது.
பரங்கிச்சாற்றை தினமும் பலதடவை பூசிவர சருமத்தில் தோன்றிய வெள்ளை திட்டுக்கள் மறையும்.
பரங்கிக்காய் தீமைகள்
பரங்கிக்காய் உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.
சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. இதனை சரி செய்ய சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.
நோயுற்று இளைத்தவர்களும், நோயாளி களும் இதை சாப்பிட வேண்டாம்.
இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.