உங்களுடைய பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

தினமும் அதிகமாக டீ, காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. பற்களை தினமும் ஒழுங்காக பராமரித்தாலே பற்கள் வெள்ளையாக இருக்கும்.

பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்குவதற்கு எளிய வழிகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

health tips in tamil

உங்களுடைய டூத் பிரஷில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை தூவிவிட்டு அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பற்களை துலக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறைதான் செய்யவேண்டும். தினமும் செய்தால் பற்களில் உள்ள எனாமல் தேய்ந்துவிடும்.

எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் இரண்டையும் சமஅளவு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கும். பற்கள் சொத்தையாவது தடுக்கப்படும்.

ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த நீரால் தினமும் காலையில் பற்களைத் துலக்கிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

தினமும் இரண்டு கொய்யா இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று துப்பிவிட வேண்டும். இதனை தொடர்ந்து செய்துவந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கி பற்கள் வெள்ளையாக மாறும்.

கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து பற்களில் தடவ வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பல் வெள்ளையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும். மேலும் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவை பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் பற்களும் பளிச்சிடும். மேலும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

Recent Post