மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சை கருத்து : யூடியூபர் மாரிதாஸ் கைது

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருபவர் மாரிதாஸ். மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பாஜகவினர் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். பிறகு போலீஸார் மற்றும் பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.
யூட்யூப் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்தவை கிஷோர் கே ஸ்வாமி, சாட்டை துரைமுருகன், மதன் உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.