விஷம் கலந்த நெல் மணியை சாப்பிட்ட 13 மயில்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஒரு கண்மாயில் 13 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்தன சம்பவம் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தினார்.
12 ஆண் மயில் ஒரு பெண் மயில் என மொத்தம் 13 மயில்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விஷம் கலந்த நெல்மணிகளை சாப்பிட்டதால் மயில்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சில நெல்மணிகள் சிதறிக் கிடந்ததை பார்த்தனர்.
அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அழிஞ்சி கண்மாய்க் கரையை ஒட்டியுள்ள வயல் வைத்திருக்கும் சீகம்பட்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர்தான் நெல்மணிகளில் எலி மருந்தைக் கலந்து தன் வயலின் வரப்புகளிலும், கண்மாய்க் கரைகளின் ஓரத்திலும் போட்டது தெரியவந்தது. அதை சாப்பிட்ட 13 மயில்களும் பரிதாபமாக உயிரிழந்தது.
தேசிய பறவையான மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற குற்றத்திற்காக வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ன் படி வழக்குப்பதிவு செய்து காசி நாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்