Connect with us

TamilXP

பச்சைமலை முருகன் கோயில் வரலாறு

ஆன்மிகம்

பச்சைமலை முருகன் கோயில் வரலாறு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத் தில் மிகவும் பழமையும் சிறப்பும் கொண்ட பச்சைமலை சுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. பார் புகழும் பச்சைமலை பாலமுருகன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் தரும் சக்தி படைத்த கடவுளாக இங்கு வீற்றிருக்கிறார்.

கோபிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பச்சைமலை மீது அமர்ந்து பன்னிருகரத்தான் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் மேன்மை தரும் மேலோனாகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர். குன்றுதோறும் குடியிருக்கும் குமரன், பச்சைமலையில் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்து வருகிறார்.

இந்த பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் ‘சுபந்தன்’ என்ற அசுரன் வாழ்ந்து வந்தான் அவன் யாகம் போன்ற தெய்வீகப் பணி செய்பவர்களைத் தடுத்து தொல்லை கொடுத்து வந்தான். துர்வாச முனிவர் தன் தவ வலிமையால் அவனை அழித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இவர் பச்சிலை மூலிகைகளை இம்மலை மீது பயிரிட்டும், பல சித்து விளையாட்டுகள் செய்தும் காட்டி, பின்பு முருகன் திருவடியில் முக்தி அடைந்ததாகப் புராணம் கூறுகிறது. மேலும் இவர் பிரம்மகத்தி தோஷம் நீங்க இம்மலைக்கு வந்து முருகளை வழிபட்டார் என்றும் தெரிகிறது.

சென்னிமலை முருகன் கோவில் வரலாறு

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோற்று விக்கப்பட்ட இக்கோயில் 1954-ஆம் ஆண்டு. கோபி புதுப்பாளையம் வாழைத்தோட்டத்து பன்னாடி காளியண்ண கவுண்டர் மகன் பி.கே. ருப்புசாமிக் கவுண்டரின் அரிய முயற்சியால் கோயில் புதுப்பிக்கும் பணி தொடங்கி ஆறு கால பூஜை நடந்து வந்தது. 1981-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு அரசு அனுமதி யுடன் ரூ.65 லட்சம் செலவில் ராஜகோபுரத் திருப்பணியும் பரஞ்சோதி என்பவரின் அரிய முயற்சியால் ரூ.25 லட்சம் செலவில் முன் மண்டப இம் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் காலை 5:30 AM மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1:00 PM மணிக்கு நடைசாற்றப்படும். அதே போல் மாலை 4:00 PM மணி முதல் இரவு 8:30 PM மணி வரை கோவில் திறந்திருக்கும்.

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top