Connect with us

TamilXP

வால்மிளகு மருத்துவ குணங்கள்

vaal milagu payangal

மருத்துவ குறிப்புகள்

வால்மிளகு மருத்துவ குணங்கள்

மிளகு, வால்மிளகு இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. மிளகை போன்றே இருக்கும். ஆனால் இந்த மிளகில் காம்புடன் இணைந்து இருக்கும். பார்பதற்கு வால் போன்று இருக்கும். அதனால் இதனை வால்மிளகு என்று அழைப்பார்கள்.

வால்மிளகின் மருத்துவ குணங்களை இன்னும் பலரும் அறியாமல் இருக்கிறோம். என்னென்ன மருத்துவ குணங்கள் என்பதை தற்போது அறிந்து கொள்வோம்.

vaal milagu payangal

சிறிதளவு வால்மிளகுத்துள் இதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும். இலவங்கப்பட்டை , வால்மிளகு இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

சந்தனப்பொடி, வால்மிளகு, அதிமதுரம் ஆகிய மூன்றையும் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் கல் அடைப்பு மற்றும் சிறுநீர் பிரச்சனை குணமாகும்.

பல் பிரச்சனைகள் குணமாக கறிவேப்பிலையை துளாக்கி அதில் லவங்கம், கடுக்காய், நெல்லி, சேர்த்து அனைத்தும் பொடியாக்கி பல் தேய்த்தால் பல் பிரச்சனை குணமாகும்.

வால்மிளகை பொடியாக்கி சீரகம் சேர்த்து மோருடன் குடித்து வந்தால் வாய் நாற்றம் பற்களில் ரத்தம் கசிதல் போன்றவை குணாகும். வால்மிளகை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் கப நோய் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

தொண்டை பிரச்சனை, தும்மல், குரல் அடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரத்தூளுடன் வால்மிளகைச் சேர்த்து லேகியமாகக் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

உடல் சூடு, சிறுநீர் எரிச்சல் இருந்தால் பசும்பாலில் வால்மிளகை ஊற வைத்து அதில் பீர்க்காங்காய் அல்லது நீர் உள்ள காய்களை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். மேலும் வாதம், பித்தம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.

கீரைகள் சமைக்கும் போது அதில் வால்மிளகு பொடியை சேர்த்தால் உடலுக்கு அதிக சத்துகளை அதிகரிக்கும். வால் மிளகில் அதிக வேதிப்பொருட்கள் இருப்பதால், அதிக மருத்துவ குணங்களையும் கொண்டதாக இருந்து வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top