இவங்க யாருனு அடையாளம் தெரியுதா? – ஜீவாவின் முதல் நாயகியின் லேட்டஸ்ட் கிளிக்

ஓரிரு ஆண்டுகளில் பல படங்களில் நடித்துவிட்டு அதற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட நடிகைகள் ஏராளம். அந்த வகையில் ஜீவாவின் ஆசை ஆசையை படத்தின் மூலம் திரையுலையில் அறிமுகமாகி பின் ஓரிரு ஆண்டுகளில் சினிமாவிற்கு குட் பை சொன்ன நடிகை தான் ஷர்மிலி.
கேரளாவில் பிறந்த இவருடைய இயற்பெயர் மீனாட்சி, ஜீவா மற்றும் ஷர்மிலி இணைந்து அறிமுகமான திரைப்படம் தான் ஆசை ஆசையை. 2003ம் ஆண்டு சினிமா துறையில் பிரவேசித்து 2005ம் ஆண்டே குட் பையும் சொல்லிவிட்டார்.
தமிழில் 4 படம், மலையாளத்தில் 8 படம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் என்று வெகு சில படங்கள் மட்டுமே நடித்தாலும் சிறிய காலத்தில் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் தான் ஷர்மிலி.
பல ஆண்டுகள் கழித்து தற்போது அவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் ஷர்மிலி தற்போது என்ன செய்து வருகின்றார் என்பது தெரியவில்லை. இந்த புகைப்படத்தில் அவர் அருகில் இருப்பது யாரென்றும் தெரியவில்லை.