இப்போ Spiritual டைம் : மனசுக்கு பிடிச்ச கோவிலில் “உதயநிதியின் நாயகி”
குறும்படங்களில் நடித்ததன் மூலம் இன்று வெள்ளித்திரை நாயகியாக உருவெடுத்தவர் தான் கோயம்புத்தூரில் பிறந்த ஆத்மிகாபானுச்சந்திரன். ஆத்மிகா என்றால் 2K கிட்ஸ்களுக்கு தெரியாமல் இருக்காது என்றே கூறலாம்.
நடிப்பின் மீது ஆசை கொண்ட ஆத்மிகா மாடலிங் துறையில் களமிறங்க, அதன் பிறகு அவருக்கு குறும்படங்களில்நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ராஜு மேனன் இயக்கத்திலும் இவர் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
அதன் பிறகு 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் வெளியான மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக தோன்றினார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் படங்கள் எதுவும் நடிக்காத நிலையில் மீண்டும் 2021ம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படத்தில் இவர் நடித்து பெயர் பெற்றார்.
அதன் பிறகு காட்டேரி என்ற படத்தில் நடித்த ஆத்மிகா தற்பொழுது உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே என்ற படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று 17 மார்க் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
நரகாசுரன் மற்றும் திருவின் குரல் என்ற வேறு இரு படங்களிலும் தற்பொழுது ஆத்மிகா நடித்த வருகிறார். நரகாசுரன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படமாகும். அரவிந்த்சாமி, ஸ்ரேயா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில் ஆத்மிகா தனக்கு பிடித்தமான கோவிலுக்கு தற்பொழுது சென்றுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் ஒரு ட்வீட் ஒன்றை அவர் செய்துள்ளார்.
