நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்…திரையுலகினர் இரங்கல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவருடைய தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.

சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம், இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.