“இயற்கை மனிதனை பழிவாங்கும் யுக்தி இது”.. Human Zoo – நடிகர் GM குமார் போட்ட ட்வீட்

ஆதி காலம் தொட்டு ஏதோ ஒரு வகையில் ஒரு மனிதன் இன்னொரு சக மனிதனுக்கு அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளான். ஏன், இந்த நவநாகரீக டிஜிட்டல் உலகத்திலும் இது நடந்துகொண்டு தானே இருக்கின்றது. பிரபல நடிகர் GM குமார் கூட இதுபோன்ற ஒரு நிகழ்வை தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நீங்கள் Human Zoo பற்றி கேட்டறிந்தது உண்டா? ஆம் ஒரு மனிதன் தனது சக மனிதனை விலங்கெனஎண்ணி காட்சிப்படுத்தும் ஒரு நிகழ்வு தான் மனித zoo. 1800களின் நடுப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இவ்வகை வழக்கம் உண்டு.
Exotic populations, அதாவது தனக்கு அந்நியமாக இருக்கும் மனிதர்கள், சரியாக சொல்லப்போனால் உருவத்தில் தங்களை விட அதீத மாற்றம் கொண்ட மனிதர்களை ஐரோப்பிய நாடுகள் சில Zoo அமைத்து அதில் காட்சிப்படுத்துவார்கள்.
அவ்வாறு 1899ம் ஆண்டு மனித உயிரியல் பூங்காக்களில் காட்சிப்படுத்தப்படுவதற்காக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படும் செல்க்னம் என்ற பூர்வீகவாசிகளின் புகைப்படத்தை வெளியிட்டு மனிதனை இயற்கை பழிவாங்கும் உத்திகளில் ஒன்று தான் இந்த பெருந்தொற்று என்று குறிப்பிட்டுள்ளார் அய்யா GM குமார்.