வெற்றிமாறன் சூரி கூட்டணியில் வரப்போகும் விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு விடுதலை என பெயரிடப்பட்டுள்ளது. வழக்கமாக வெற்றிமாறன் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார்தான் இசையமைப்பார். ஆனால் முதல்முறையாக இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

கோ, கவண் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் சூரி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதிகம் குளிரான இடங்களில் ஷூட்டிங் நடைபெறுவதால் படத்திலிருந்து பாரதிராஜா விலகினார்.

பாரதிராஜாவுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பூமணியின் ‘வெக்கை’ நாவலை அசுரன் என்ற திரைப்படமாக்கிய வெற்றிமாறன் மீண்டும் ஒரு சிறுகதையை மையப்படுத்தித் தான் சூரியின் படத்தையும் இயக்குகிறார்.

போலீஸ் கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்து வருவதாகவும் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

சூரி நடிக்கும் விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்