இதுவரை நீங்க பார்க்காத ஒரு ரஜினி.. ஜெயிலர் பட அப்டேட் கொடுத்த வசந்த் – வீடியோ உள்ளே!

ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன் கிடைத்த தகவலின்படி ஜெயிலர் படத்தில் தனது பகுதியை நடித்து முடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் மற்றும் கன்னட நடிகரான சிவ்ராஜ் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் திரைப்படம் இதுதான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 169 திரைப்படமாக இது உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய பிரபல நடிகர் வசந்த் ரவி, இந்த படத்தில் தனக்கு ஒரு கனமான பாத்திரம் அமைந்திருப்பதாக கூறினார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மாபெரும் விருந்தாக அமையும் என்றும், நெல்சன் மிக நேர்த்தியான கதை களத்தை அமைத்து வருவதாகவும் கூறினார். மேலும் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் நடித்த 168 படங்களில் இல்லாத அளவிற்கு ஒரு புதுமையான அவதாரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.