நடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்

நடிகரும் இயக்குனருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார். 1945 ஆம் ஆண்டு விசு பிறந்தார். இவருடைய முழு பெயர் எம் .ஆர் விஸ்வநாதன்.

விசு அவர்கள் நடிகர் மட்டுமல்ல எழுத்தாளர், இயக்குனர், நாடக நடிகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் திரைத்துறையில் முதன் முதலாக கே.பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

விசு நடித்த முதல் படம் ரஜினியின் தில்லுமுல்லு. அந்த படத்தில் இவர் டப்பிங் செய்துள்ளார். அதன் பிறகு குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம்  1986 ஆம் ஆண்டின் தமிழ் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது.

Advertisement

நடிகர் விசு கண்மணி பூங்கா என்ற படத்தை முதல் முறையாக இயக்கினார். மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற பல படங்களை விசு தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். இவர் கடைசியாக தங்கமணி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

டிவி சீரியல்களில் நுழைந்த விசு, நடித்ததோடு மட்டுமில்லாமல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நடிகர் விசு சென்னையில் இன்று (22.03.2020) காலமானார் அவருக்கு வயது 72.