மீண்டும் களமிறங்கும் அபிராமி.. வெளியாகும் திரில்லர் வெப் சீரிஸ்!

நடிகை அபிராமி, கேரளாவில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து நாயகியாக உருவெடுத்தவர். தமிழில் இவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில்.
அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அபிராமி கடந்த 2004ம் ஆண்டு உலகநாயகன் கமல் அவர்களுடைய நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தில் நடித்தார்.
அன்னலட்சுமி என்ற அந்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு பலரின் பாராட்டை பெற்றது. ஆனால் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார் அபிராமி, சுமார் 10 ஆண்டு காலம் திரைத்துறை பக்கமே வராமல் இருந்தார் அவர் என்று தான் கூற வேண்டும்.
அதன் பிறகும் கூட அவ்வப்போது கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அபிராமி வெகு சில தமிழ் படங்களில், அதுவும் சின்னஞ்சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் முதன் முதலில் அவர் நடிப்பில் ஒரு இணைய தொடர் வெளியாக உள்ளது, ஒரு கோடை Murder Mystery என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் பல சிறந்த படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளியாக உள்ளது.