நேக்கா டேக்கா கொடுக்க நினைத்த யாஷிகா – அதிரடி முடிவை எடுத்த குற்றவியல் நீதிமன்றம்

சில மாதங்களுக்கு முன்பு சென்னை ECR சாலையில் அதிவேகமாக வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள் சிக்கி பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி ஒருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பல மாதங்கள் கழித்து தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் யாஷிகா ஆனந்த், முன்பை போலவே கவர்ச்சி தூக்கலான பல போட்டோ சூட்டுகளை தொடர்ச்சியாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
ஓரிரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள யாஷிகா ஆனந்திற்கு தற்பொழுது பழைய சிக்கல் ஒன்று மீண்டும் உருவெடுத்துள்ளது. அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதற்காக யாஷிகாவின் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான விசாரணை தற்போது மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது, ஆனால் இந்த விசாரணைக்கு செல்லாமல் யாஷிகா ஆனந்த் டேக்கா கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் நாளை மார்ச் 25ம் தேதிக்குள் யாஷிகா ஆனந்த் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் கூறியுள்ளது.