வெளியான பர்ஹானா திரைப்படம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது வெளியாகி நல்ல முறையில் ஓடிவரும் திரைப்படம் தான் பர்ஹானா. மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ஜித்தன் ரமேஷ், இயக்குநர் செல்வராகவும், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இஸ்லாமிய பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு சில இடங்களில் இருந்து இந்த படத்திற்கான எதிர்ப்பு அவ்வப்போது எழுந்து வருகிறது. படம் வெளியான அன்று, திருவாரூரில் ஒரு திரையரங்கத்தில் சில சலசலப்பு ஏற்பட்டு பின் ஒரு காட்சி ரத்தானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை தி நகர் பகுதியில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஒரு சாரார் எதிர்த்து வரும் நிலையில் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.