“சார் கொஞ்சம் சீக்கிரம் முடிங்க..” அஜித் குமார் 62 – அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருவது அஜித்குமாரின் 62வது திரைப்படம் தான். முதலில் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவித்தது.
ஆனால் கதையை முடிக்க அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் கடைசி நிமிடத்தில் இயக்குனர் மாற்றப்பட்டார். தற்பொழுது மகிழ் திருமேனி அஜித்குமாரின் 62 ஆவது படத்தை இயக்க தயாராகி வருகின்றார்.
ஆனால் விக்னேஷ் சிவனை மிஞ்சும் அளவிற்கு மகிழ் திருமேனியும் கதையை முடிக்க இன்னும் அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் கடுப்பான லைக்கா நிறுவனம் கொரியன் கதை ஒன்றை கொடுத்து அதை டெவலப் செய்ய சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால் இந்த கதையை உருவாக்க மேற்கொண்டு மூன்று மாதங்கள் தேவைப்படும், ஆனால் அதற்குள் என்னுடைய கதையை முடித்து விடுகிறேன் என்று கூறியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. எனவே அஜித் குமாரின் 62வது திரைப்படம் மகிழ் திருமேனியின் கதையா? அல்லது அந்த கொரியன் படத்தின் கதையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை திருப்தி செய்யும் அளவிற்கு விரைவில் இந்த படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.