“கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்கு” : நாயகியாக களமிறங்கும் நடிகை அனிகா சுரேந்திரன்

சோட்டா மும்பை என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது கதாநாயகியாக மாறி உள்ளவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன். கேரளாவைச் சேர்ந்த இவர் பல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
முதன் முதலில் 2015ம் ஆண்டு ஜி.வி.எம் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இஷா என்ற கதாபாத்திரத்தில் தல அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் மீண்டும் 2019ம் ஆண்டு வினோத் இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் தல அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் அனிகா தற்போது நாயகியாக களமிறங்கியுள்ளார். அதுவும் லிப் லாக் காட்சிகளில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார் அவர், குழந்தையாக பார்த்த பெண் அதற்குள் லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று தான் கூறவேண்டும்.
மேலும் அனிகா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.