Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் வரலாறு

ஆன்மிகம்

அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் வரலாறு

ஊர் : கோவிலடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு.
மூலவர் : அப்பக்குடத்தான்
தாயார் : இந்திராதேவி,கமலவல்லி
ஸ்தலவிருட்சம் : புரஷ மரம்
தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள் : பங்குனி உத்திரத்தில் தேர்,தீர்த்தவாரி,வைகுண்ட ஏகாதசி,நவராத்திரி,கிருஷ்ணனுக்கு உறியடி உற்சவம்
திறக்கும் நேரம் : காலை 8:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:30மணி முதல் இரவு 8:00 மணி வரை.
தொலைபேசி எண்

4362 – 281488
4362 – 281460
4362 – 281304

தல வரலாறு

உபமன்யு என்ற மன்னன் துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு முனிவர்,”மன்னா பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்,”என்றார். இதன்படி மன்னன் கோவிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது.

ஒரு நாள் ஸ்ரீமன் நாராயணன்,வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க,அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தர். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன்,”ஐயா!தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,”என கேட்டான். அதற்கு அவர்,”எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,”என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்த்தது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 6 வது திவ்ய தேசம். இத்தல பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் “பஞ்சரங்கத்தலம்’என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் வழிகாட்டி விநாயகர் உள்ளார்.

இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்கண்டேயருக்கு எம பயம் போக்கியும் அருளிய தலம். ஸ்ரீரங்கத்திற்கும் மிக பழமையானது இத்தலம். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாக கோவிலடி அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது. இங்கு வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாள் மேற்கு பார்த்தும் தாயார் கிழக்கு பார்த்தும் “தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top