Search
Search

பெயர் மாற்றம் பெரும் அச்சம் என்பது இல்லையே – அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளியீடு

பிரபல இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் அச்சம் என்பது இல்லையே, இந்த படத்திற்கு தற்பொழுது மிஷன் (Mission) என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

பிரபல லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்த ஒரு அப்டேட்டை தற்பொழுது கதையின் நாயகி எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் நான்கு மொழிகளில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம் என்று தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார்.

ஆனால் அதற்கு பிறகு வெளியான அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை அவருக்கு தர மறுத்தது. இருப்பினும் தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்த அவருக்கு 2015ம் ஆண்டு GVM இயக்கத்தில் தல அஜித் உடன் இணைந்து நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ஒரு Come Back கொடுத்தது.

அதன் பிறகு அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக அமைந்த வண்ணம் உள்ளது. அடுத்து வணங்கான் என்ற திரைப்படத்திலும் தற்பொழுது நடித்து வருகிறார். இவருடைய பார்டர் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like