ஆமா யார் அந்த “அவார்ட் பைத்தியம்”? புதிய புரளியை கிளப்பும் ப்ளூ சட்ட மாறன்

உலக அளவில் சினிமாவிற்கு என்று அளிக்கப்படும் விருதுகளில் ஆஸ்கார் விருதுகள் தான் மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்கார் விருதுகளுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் உலக நாயகன் கமலின் படங்கள் என்றபோதும் இன்று வரை அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்காதது ஒரு பெரிய குறையாகவே உள்ளது (ஆனால் அவர் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேற விஷயம்).
இந்த நிலையில் காந்த மார்ச் 12ம் தேதி இந்த 2023 ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த முறை இந்திய திரைப்படங்களும் ஆஸ்கார் விருதுகளை தட்டிச்சென்றது. குறிப்பாக ராஜ மௌலியின் RRR திரைப்படத்தில் வந்த “நாட்டு கூத்து” பாடல் மற்றும் “The Elephant Whisperers” என்ற ஆவண குறும்படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளது பலரை சந்தோஷப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய நக்கலான திரைவிமர்சனத்திற்கு பெயர் பெற்ற ப்ளூ சட்டை மாறன் அண்ணன் ஒரு ட்வீட் ஒன்றை போட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட் இதோ…
நம்மாளுங்க இரண்டு பேருல இசைக்கடவுள் சரி, அவர் நம்ம இளையராஜா அய்யா தான். ஆனா யார் இந்த அவார்ட் பைத்தியம் என்று தான் புரியவில்லை. மாறன் அவர்கள் அதையும் தெளிவாக சொல்லியிருந்தால் இன்னும் நலமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் மக்கள்.