Search
Search

ஐங்கரன் திரை விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள் தாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Ayngaran Movie Review Tamil

வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை நாமக்கலில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அதை எடுப்பதற்காக ஒரு குழந்தையை கடத்தி அந்த ஆழ்துளை கிணற்றில் போடுகிறார்கள்.

மறுபுறம் இன்ஜினியரிங் பட்டதாரியான நாயகன் ஜி.வி.பிரகாஷ் குழந்தையைக் கிணற்றில் இருந்து மீட்க புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். ஆழ்துளை கிணற்றில் போடப்பட்ட குழந்தையை மீட்க முயற்சி செய்கிறார். அதன் பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் படத்தின் கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குனர் ரவி அரசுவின் திரைக்கதை. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கதையை விறுவிறுப்பாக நகர்தியிருக்கிறார் இயக்குனர் ரவிஅரசு.

நாயகன் ஜி வி பிரகாஷ் குமார் எல்லா காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஒரு படி மேலே போயிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகி மஹிமாவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.

காளிவெங்கட், ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நடிகர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஜி.வி.யின் இசையில் பாடல்களை காட்டியிலும் பின்னணி இசை ஓங்கி ஒலிக்கிறது.

சமகாலத்தின் தேவையை சரியாகச் சொல்லிருப்பதால் ஐங்கரனை வரவேற்போம்.

Leave a Reply

You May Also Like