பெண்கள் நிர்வாணமாக இருந்தாலும் அழகாக இருக்கிறார்கள் : பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு

யோகா குருவும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் பெண்கள் ஆடை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் நடந்த ஒரு விழாவில், ராம்தேவ், “பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், பெண்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள், என் பார்வையில், அவர்கள் ஒன்றும் அணியாமல் இருந்தாலும் அழகாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

பெண்களுக்கு எதிராக ராம்தேவ் கூறிய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டெல்லி பெண் தொழிலாளர்கள் ராம்தேவின் புகைப்படத்திற்கு செருப்பால் மாலை அணிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம், 1993 இன் பிரிவு 12 (2) மற்றும் 12 (3) இன் படி, பாபா ராம்தேவ் தனது அறிக்கையின் விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் ஆணைய அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சாகங்கர் தெரிவித்துள்ளார்.