பேச்சுலர் (Bachelor) திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியுள்ள படம் பேச்சுலர். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நடித்துள்ளனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார், தனது சொந்த ஊரைச் சேர்ந்த நண்பர்களுடன் தங்குகிறார். தனது அலுவலகத்தில் பணிபுரியும் திவ்யபாரதியை காதலிக்கிறார். பின் இவர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை, பிரச்சனைகள் மற்றும் பிரிவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
மலையாள பட பாணியில் தமிழ் ரசிகர்களின் மனதிற்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார் இயக்குனர் சதீஷ். முதல் படமாக இருந்தாலும் தான் சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திவ்யபாரதி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று அழகாக நடித்துள்ளார்.
நண்பர்களுக்கிடையே நடக்கும் காட்சிகள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. சிந்து குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ராட்சசன், ஓ மை கடவுளே போன்ற வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் அக்சஸ் பேக்டரி நிறுவனம் இந்தமுறையும் அதே போல் ஒரு நல்ல படத்தை தயாரித்து உள்ளது.
ஒவ்வொரு காட்சியமைப்புகளும் ம் கண் முன்னே நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகவே ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரை பாராட்டலாம்.
மொத்தத்தில் இந்த Bachelor இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு படமாக வந்துள்ளது.