முதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்

முதுகு வலி தற்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வரும் நோயாகும், ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவதும், இரு சக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதும்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. முதுகுத்தண்டு பலவீனமாக இருப்பவர்களுக்கும் முதுகு வலி ஏற்படுவதுண்டு.

முதுகு வலி உள்ளவர்கள் வலியில் இருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ள இதோ சில டிப்ஸ்

முதுகு வலி ஏற்பட்டால் அதனை அலட்சியப் படுத்தாமல் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். முதுகு வலிக்கான மாத்திரையை எப்போதும் கையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். முதுகு வலி ஏற்பட்ட உடனே மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

Advertisement

டாக்டரிடம் ஆலோசனை பெற்று முதுகில் வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டியை வைக்க வேண்டும்.

படுக்கும்போது கரடு முரடான இடங்களிலோ, எளிய படுக்கையிலோ படுக்கக்கூடாது. மெத்தையில்தான் படுக்க வேண்டும்.

முதுகு வலியைப் போக்குவதில் உடற்பயிற்சிக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆகையால் முதுகு வலிக்கான உடற்பயிற்சி மிகவும் அவசியமாகும். வாக்கிங் சிறந்த பயிற்சி

யோகாசனம் மூலமும் முதுகு வலியைக் குணப்படுத்த முடியும். ஆகையால் முதுகு வலியைப் போக்கும் தன்மையுள்ள ஆசனங்களைக் கற்றுக்கொண்டு அதனை தினமும் செய்வது நல்லது.

முதுகுப் பகுதியில் தினமும் படுக்கும்போது மசாஜ் செய்வது நல்லது. இதற்காக பிறரின் உதவியை நாட வேண்டும். மசாஜ் செய்வதன் மூலம் முதுகுப்பகுதியில் த்த ஓட்டம் நன்கு இருக்கும்.