ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் சைரன்.. விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!

ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் மற்றொரு படம் தான் சைரன். பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது காரைக்காலில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஷூட்டிங் பணிகள் முடிந்தவுடன் நடிகர் ஜெயம் ரவி மீண்டும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
விறுவிறுப்பாக இந்த படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகின்றது, 7 மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. பொன்னியின் செல்வன் மற்றும் சைரன் படங்களை தவிர்த்து இறைவன் மற்றும் ஜெயம் ரவி 30 உருவாகி வருகின்றது.
நேற்றோடு (ஏப்ரல் 11) சந்தோஷ் சுப்ரமணியம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஜெயம் ரவியின் அண்ணனும் பிரபல இயக்குநருமான மோகன் ராஜா மக்களின் பேராதரவிற்கு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.