Search
Search

இந்த பழக்கமெல்லாம் இருந்தா சிறுநீரகம் வேகமாக பாதிக்குமாம்..!!

health tips in tamil

சிறுநீரகங்கள் நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. மேலும் உடலின் நீர், உப்பு மற்றும் தாதுக்களின் சமநிலையையும் பராமரிக்கும். எனவே சிறுநீரகப் பராமரிப்பு என்பது மிக முக்கியமானது. சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நமது தினசரி பழக்கங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

health tips in tamil

வலி நிவாரணி மருந்து

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் சென்று மருந்துகளை வாங்கி உண்கிறோம். இது உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும். எனவே வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது.

உப்பு

உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது அல்லது உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாப்பாட்டில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் காணப்படும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக பாஸ்பரஸ் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிறுநீரகங்கள் மற்றும் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல், மது அருந்துதல் இந்த இரண்டு பழக்கங்கள் எப்போதுமே உடல் நலத்திற்கு தீங்கு தான். இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோயின் அபாயம் இரண்டு மடங்காக இருக்கும்.

சர்க்கரை

அதிக சர்க்கரை உட்கொள்ளவது உடல் பருமனுக்கு வழி வகுக்கும். மேலும் இரத்த அழுத்தம், நீரிழிவு அபாயம் மற்றும் சிறுநீரக நோய்க்கு வழி வகுக்கும். எனவே வெள்ளை சர்க்கரை சேர்த்த ரொட்டி ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

தினமும் 3-லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்களை தவிர்க்க முடியும்.

Leave a Reply

You May Also Like