பயில்வான் ரங்கநாதனுக்கு 2 ஆஸ்கார் விருது?.. சேர்ந்து குழப்பும் வெங்கட் மற்றும் ஜி.வி பிரகாஷ்!

இன்றைய கால தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு, அய்யா பயில்வான் ரங்கநாதனை ஒரு சினிமா விமர்சகராக, சர்ச்சை மன்னனாக நன்றாக தெரியும். உண்மையில் அவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் காலம் தொட்டு ஊடகத்துறையில் பணியாற்றிவரும் ஒரு நல்ல நடிகர் ஆவார்.
தூத்துக்குடி சிறுதொண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர் பிறந்தது 1944ம் ஆண்டு, இவருடைய உடல்வாகை கண்டு பயில்வான் என்ற பட்டத்தை இவருக்கு கொடுத்ததே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான்.
இன்றைக்கு சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் பெற்றவராக வலம்வந்தாலும், தமிழ் சினிமா வரலாற்றில் நடிகராக இவருக்கென்று தனி இடம் உண்டு. இந்நிலையில் இவர் ஆஸ்கார் விருது வாங்குவதுபோல ஒரு போட்டோவை எடிட் செய்து வெளியிட்டு ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அவர் வெளியிட்ட பதிவில் “இசை வெள்ளம் அய்யா பயில்வான் ரங்கநாதன் அவர்களின் இசைக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளது பெருமையளிக்கிறது என்றும், இதுகுறித்த தகவலை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் வெளியிடுவார்” என்றும் கூறியுள்ளார்.
என்னதான் சொல்லப்போறாங்க என்று ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர் என்று தான் கூறவேண்டும்.